சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘வேலியண்ட்’ சிம்பொனி இசைநிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, “நம் இசையையும் சிம்பொனியையும் இணைத்தது இசை உலக சரித்திரத்தில் மிகப்பெரிய சாதனை” என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும், “நான் சாதனைகளுக்காகவோ, விருதுகளுக்காகவோ காத்திருப்பவன் அல்ல. நான் நடந்தாலும், பேசினாலே சாதனைதான்” என்று தன்னம்பிக்கையுடன் கூறினார். அவரது இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.