நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில், நகராட்சி அதிகாரிகளிடம் தவெக நிர்வாகி அருண்ராஜ் வாக்குவாதம் செய்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார். சென்னையில் இன்று (பிப்.6) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சானார்பாளையம் பகுதியில் கழிவு தண்ணீர் தேங்கியுள்ளதாக மகக்ள் என்னிடம் புகார் அளித்தனர். நான் நகராட்சி அதிகாரிகளுடன் மரியாதையுடன் பேசினேன். மக்கள் தான் கொந்தளித்தனர். நான் பேசவில்லை என்றால் பெரும் போராட்டம் நடந்திருக்கும்” என்றார்.
நன்றி: தந்தி