முதலமைச்சர் விஜய் பிரச்சாரத்துக்கு முந்தைய திமுக அரசு அனுமதி கொடுத்திருந்தால் 234 தொகுதியிலும் வெற்றி பெற்றிருப்போம் என அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று பேசிய அவர், ஒரு கூட்டம் நடத்த 37 கட்டுப்பாடுகள் விதிப்பீர்கள். காலையில் அனுமதி கொடுத்துவிட்டு மதியம் ரத்து செய்வீர்கள். உங்களுடைய நல்ல நேரம் எல்லா இடத்திலும் அனுமதி கொடுத்திருந்தால் 234 தொகுதியிலும் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். இதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது என்றார். அப்போது தவெக உறுப்பினர்கள் ஆரவாரம் செய்தனர்.