தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்குவோருக்கு இன்று (ஜன.13) முதல் 24 மணி நேரமும் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கொடூர கொலை சம்பவத்தை தொடர்ந்து, மருத்துவத் துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், இனி அடையாள அட்டை இன்றி மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.