வங்கதேசத்தில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக அந்நாட்டு வீரர் முஷ்தபிசுர் ரகுமான் IPL போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த தடைக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) பிரதிநிதிகள் குழு இன்று (ஜன.17) வங்கதேசம் செல்ல இருக்கிறது. அங்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் இது குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.