துபாயில் நேற்று (நவ.12) ஐ.சி.சி. வெளியிட்ட ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியலில், விராட் கோலி டாப்-5க்கு முன்னேறியுள்ளார். பேட்ஸ்மேன்களில் ரோகித் சர்மா, சுப்மன் கில் முதல் 4 இடங்களில் தொடர்கின்றனர். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 2 இடங்கள் சரிந்து 7-வது இடத்துக்குச் சென்றுள்ளார். இதனால், விராட் கோலி ஒரு இடம் முன்னேறி டாப்-5க்குள் நுழைந்தார். இலங்கை வீரர் அசலங்காவும் 6-வது இடத்தைப் பிடித்தார். பந்துவீச்சில் ரஷித் கான் முதலிடத்திலும், ஜோப்ரா ஆர்ச்சர் 2-வது இடத்திலும் உள்ளனர்.