ICC சேர்மன் ஜெய் ஷா இன்று (ஜூன் 10) லண்டனில் நடந்த விழாவில் ICC Hall of Fame விருது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதில் MS தோனியின் பெயரும் இடம்பெற்று இருந்தது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளுக்கு ஐ.சி.சி இந்த கவுரவத்தை அளிக்கிறது. இதுகுறித்து தோனி கூறுகையில், "பல தலைமுறை கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்பில் என்னையும் சேர்த்துக்கொண்டதை பெருமையானதாக நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.