துபாயில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை ஷிபாலி வர்மாவை ஆக்ரோஷமாக வழியனுப்பி அவமதிக்கும் வகையில் சைகை செய்த பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) போட்டி ஊதியத்தில் 10 சதவீதம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இப்போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.