பாஜகவின் கிளை செயலாளர் தான் இபிஸ் - முதல்வர் விமர்சனம்

சென்னை கிண்டியில் நியூஸ் 18 "டவுன்ஹால்" நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.23) கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், "வரவிருக்கும் தேர்தல் ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையிலான போர். பாஜகவின் அரசியல் சதியை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்" என்று தெரிவித்தார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் கிளை செயலாளராக செயல்படுகிறார் என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி