ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு

தமிழகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பிரதீப் யாதவ், கைத்தறித் துறை முதன்மைச் செயலாளராக டி.என்.வெங்கடேஷ், வேளாண்மைத் துறை செயலாளராக பி.சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக ஜி.லதா, GUIDANCE நிர்வாக இயக்குநராக தீபக் ஜேக்கப் மற்றும் கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக முத்துக்குமரன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி