ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு வழக்கு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு தொடர்பான வழக்கில், இந்திய அரசியல் சட்டம் 32ன் கீழ் நேரடியாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மனுதாரர் முதலில் உயர் நீதிமன்றத்தை அணுகி ரிட் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு அறிவுறுத்தியது. 1995ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர் பதவிகள் வழங்கிய தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி