முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார். பிரதமர் மோடி அவரை சந்திக்க மறுத்த நிலையில் இம்முடிவை எடுத்தார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் இன்று (ஆக.01) அளித்த பேட்டியில், “ஓபிஎஸ் ஏன் இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை. தனிப்பட்ட காரணங்களால் மேற்கொண்டிருக்கலாம். பிரதமரை சந்திக்க வேண்டும் என கூறியிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன்" என்றார்.