முதலமைச்சர் விஜயை விமர்சித்து பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “முதலமைச்சர் விஜய் நடித்த பட பாடலை கொஞ்சம் மாற்றி, 'மதுரைக்குப் போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்' என்று தான் பாடத் தோன்றுகிறது. மதுரையின் சமீபத்திய நிலை.. மதுரை மட்டுமல்ல ஒட்டு மொத்த மாநிலத்திலும் குற்றச் சம்பவங்கள் குறைந்து அமைதி எப்போது திரும்பும் முதலமைச்சர் விஜய்?. கடந்த வாரம் ஒரே நாளில் 3 கொலைகள். இந்த வாரம் முதல் நாளே அலங்காநல்லூரில் அரிவாள் வெட்டு நடந்துள்ளது” என்றார்.