“விஜய்க்கு நல்லதே நினைப்பேன்” - அஜித் கருத்து

‘நடிகர் விஜய்க்கு எப்போதுமே நான் நல்லதே நினைப்பேன்’ என நடிகர் அஜித்குமார் கூறியதாக ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “சமீபத்தில் நான் (அஜித்) கொடுத்த பேட்டியை விஜய்க்கு எதிரானது என்று சித்தரிக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. உள்நோக்கங்களுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பது போன்று போலி சமூக ஆர்வலர்கள் பேசி வருகின்றனர். இது போன்ற போலிகளால் மூளைச்சலவை ஆகாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என அஜித் கூறியதாக பாண்டே தெரிவித்துள்ளார்.

நன்றி: சாணக்யா

தொடர்புடைய செய்தி