“விஜயகாந்த் எடுத்த முடிவை நான் எடுக்க மாட்டேன்” - சீமான்

தேமுதிக முன்னாள் தலைவர் விஜயகாந்த் எடுத்த முடிவை தான் எடுக்கப்போவது இல்லை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதியளித்துள்ளார். சென்னையில் இன்று (நவ.6) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விஜயகாந்த் அவசரப்பட்டு கூட்டணி வைத்ததால் என்ன நடந்தது என்பதை அனைவரும் பார்த்தோம். கூட்டணி விவகாரத்தில் விஜயகாந்த் எடுத்த முடிவை நான் எடுக்க மாட்டேன். யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம்” என்றார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி