கீழடி அகழாய்வு அறிக்கையில் சிலவற்றிற்கு மத்திய தொல்லியல் துறை விளக்கம் கோரி இருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 982 பக்க ஆய்வறிக்கையில் எழுத்துப் பிழையை வேண்டுமானால் திருத்துகிறேன். ஆனால், உண்மையைத் திருத்தமாட்டேன் என அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குற்றம் என்றும் அவர் கூறியுள்ளார்.