அமித்ஷாவை சந்திக்க போவதில்லை - ராமதாஸ்

மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க போவதில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ராமதாசை ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி மீண்டும் சந்தித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், "ஆடிட்டர் குருமூர்த்தி உடனான சந்திப்பு குறித்து தைலாபுரத்தில் பதிலளிக்கிறேன்" என்று பேட்டியளித்துள்ளார். மேலும், மதுரைக்கு வரும் அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு ராமதாஸ், இல்லை.. இல்லை.. என்று கூறியுள்ளார்.

நன்றி: SUN NEWS

தொடர்புடைய செய்தி