இளம்பெண் கூறிய பாலியல் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார். மேலும் அவர், "என்னை பற்றி கொஞ்சம் தெரிந்தவர்களுக்கு கூட, இது உண்மை இல்லை என்று தெரியும். அவர்களே இதை பார்த்தால் சிரிப்பார்கள். இது போன்ற அசிங்கமான குற்றச்சாட்டுகள் என்னை பாதிக்காது. என்னை சேர்ந்தவர்களும், எனது குடும்பத்தினரும் இதனால் மன உளைச்சளுக்கு ஆளாகியிருக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.