’நான் செத்து போயிடுவேன்’.. கலங்கிய நடிகர் அபிநய்.. உதவிய பாலா

நடிகர் அபிநய் கல்லீரல் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். KPY பாலா அவர் வீட்டிற்கு சென்று ரூ.1 லட்சம் உதவி வழங்கியிருக்கிறார். அப்போது, மனதளவில் மிகவும் சோர்ந்து போயிருந்த அபிநய், "பாலா.. சீக்கிரமா போயிடுவேன்," என்று கண்கலங்கப் பேசியிருக்கிறார். அதற்கு, “அப்படி எல்லாம் சொல்லாதீங்க அண்ணா. நாங்க எல்லாம் இருக்கோம். நீங்க சீக்கிரமா உடல்நிலை சரியாகி மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும்" என்று ஆறுதல் கூறியுள்ளார். 

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி