நடிகர் பார்த்திபன், மகன் ராதா கிருஷ்ணனுக்கு திருமணம் முடிந்ததும் தானும் திருமணம் செய்யப் போவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார். இது ஜாலியாக, காமெடியாக கூறிய வார்த்தை மட்டுமே; நிஜ வாழ்க்கையில் அப்படி எந்த முடிவும் இல்லை என விளக்கம் அளித்தார். திருமணம் ஒருமுறை தான் என்ற தீர்மானத்தில் இருப்பதாகவும் கூறினார். பார்த்திபன் – நடிகை சீதா 1990ல் திருமணம் செய்து 2004ல் விவாகரத்து பெற்றனர்.