நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (நவ.3) செய்தியாளர்களை சந்தித்த அவர், "பொதுவாகவே யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் விஜய்யை வரவேற்கிறேன்" என கூறியுள்ளார். மேலும், விஜய்யை நேரில் சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, "அவரைச் சந்திக்க எனக்கு அவசியம் இல்லை, ஆனாலும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் மகிழ்ச்சிதான்" என்று அவர் பதிலளித்துள்ளார்.
நன்றி:PT