ஒரே நேரத்தில் பலருடன் உறவில் இருந்தேன்: நடிகை ஓபன் டாக்

தான் பலருடன் ஒரே நேரத்தில் திறந்த உறவில் இருப்பதாகவும், தன்னிடம் எந்த ரகசியமும் இல்லை என்றும் பாலிவுட் நடிகை ஷஹானா கோஸ்வாமி தெரிவித்துள்ளார். காதல் எப்போதும் சுதந்திரமானதாக இருக்க வேண்டும் என்றும், தன்னுடன் பழகுபவர்களுக்கு தான் மற்றவர்களுடன் நெருக்கமாக இருப்பது தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உறவில் பொறாமை போன்ற உணர்வுகளைக் கையாள அதிக மன முதிர்ச்சி தேவை என்றும் அவர் கூறியுள்ளார். இவர், நடிகர் மிலிந்த் சோமனை நீண்ட காலம் காதலித்து 2013ல் பிரிந்தார்.

தொடர்புடைய செய்தி