தமிழ்நாட்டில், திமுக அரசு சொல்லாத திட்டங்களையும் செய்துள்ளதாக திமுக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். சென்னை ராணிப்பேட்டையில் இன்று (பிப்.21) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஓபிஎஸ் அணி எம்எல்ஏ, முதலமைச்சரை பாராட்டுகிறார் என்றால் இந்த ஆட்சி சிறப்பாக உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது” என்றார். மேலும் விஜய் குறித்த கேள்விக்கு, “எனக்கு விஜயை ரொம்ப பிடிக்கும் சார். நல்லா கை நீட்டி.. இப்படி அப்படி பேசுவார். சினிமா வேறு அரசியல் வேறு” என்றார்.
நன்றி: PT