டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து இன்று (டிச.3) சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசியல் நிலவரம் குறித்து அமித் ஷாவிடம் பேசினேன். தமிழ்நாடு அரசியல் நகர்வுகள் குறித்து விவாதித்தோம்” என்றார். நேற்று (டிச.2) ஓபிஎஸ் திடீரென டெல்லி சென்ற நிலையில், இன்று சென்னை திரும்பினார்.
நன்றி: சன்நியூஸ்