எடப்பாடி பழனிசாமி விமர்சனம் குறித்து எந்த கவலையும் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று (நவ.10) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை இல்லை. எங்களுக்கு அவர் வைக்கும் விமர்சனங்கள் பற்றியெல்லாம் கவலையில்லை” என்றார். மேலும், “எங்கள் வேலையை நாங்கள் பார்த்து கொண்டிருக்கிறோம். எந்த கூட்டணி வந்தாலும் கவலை இல்லை" என்றார்.
நன்றி: சன்நியூஸ்