மாதவிடாய் காரணமாக திருவிழா விரதத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என வருந்திய பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சியில் வசித்து வரும் 3 குழந்தைகளின் தாய் பிரியன்ஷா சோனி (36). இவர், நவராத்திரி விரதம் மேற்கொள்ள திட்டமிட்ட நிலையில், மாதவிடாய் காரணமாக வழிபாடு செய்ய முடியாததால் தற்கொலை செய்துகொண்டார். கணவர் முகேஷ் மனைவியை சமாதானம் செய்ய முயற்சித்தும் பலனில்லாமல் அவர் விபரீத முடிவு எடுத்துள்ளார்.