தலைவரும், தந்தையுமான கலைஞருக்கு அளித்த வாக்குறுதியை நான் நிறைவேற்றிவிட்டேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை செம்மொழிப்பூங்கா திறப்பு விழாவில் இன்று (நவ., 25) பேசிய அவர், 'அடிக்கல் நாட்டியபோது சொன்னபடி, குறித்த காலத்தில் செம்மொழிப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எனது இதயத்தில் மகிழ்ச்சி பூக்கள் பூக்கின்றன. 2025-26 நிதியாண்டில் புதிதாக 30 பூங்காக்கள் உருவாக்கப்படும்' என்று தெரிவித்தார்.