தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோயிலில் காமெடி நடிகர்கள் முத்துக்காளை மற்றும் கிங்காங் ஆகியோர் இன்று (நவ., 09) சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்துக்காளை, 'காமெடி என்றாலே எனக்கு என்னவென்று தெரியாது. நான் ஒரு ஸ்டன்ட் கலைஞன். இதுவரை 300 படங்களுக்கும் மேல் காமெடி நடிகனாக பல்வேறு நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளேன். அதற்கு எல்லாம் காரணம், முருகனின் செயல்' என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.
நன்றி: புதிய தலைமுறை