நாடாளுமன்றத்தில் நேற்று (பிப்.4) ‘என்னுடைய மொழிக்கு ஏதாவது பிரச்னை என்றால் இந்த கமல் சும்மா இருக்க மாட்டான்’ என மநீம தலைவர் கமல்ஹாசன் எம்பி பேசினார். மத்திய நிதியமைச்சரின் கருத்துக்கு கமல் ரிப்ளை கொடுக்கும் விதமாக இந்த பேச்சு அமைந்தது. இதுகுறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் இன்று (பிப்.5) செய்தியாளர்கள் கேட்டபோது, “கமல்ஹாசன் பேசியது எனக்கு புரியவில்லை. உங்களுக்குப் புரிந்ததா?. ஏற்கனவே கோவை மக்களுக்கு அவருடைய பேச்சு புரியாததால்தான், அவரை அனுப்பிவிட்டார்கள்” என்றார்.