“சீமான் ஏன் கட்சி நடத்துகிறார் என தெரியவில்லை”.. தவெக நிர்மல்குமார்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (பிப்.18) தவெக விஜய் குறித்து விமர்சித்துப் பேசியிருந்தார். இதுகுறித்து இன்று (பிப்.19) செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாகி நிர்மல்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சீமான் 18 வருடங்களாக எதற்காக கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்?. ஆட்சிக்கு வரமாட்டேன், ஆட்சி வேண்டாம், பதவி வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு, எந்த நோக்கத்திற்காக அவர் கட்சியை நடத்துகிறார் என்று தெரியவில்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி