சென்னை: கணவர் இல்லாத பெண் ஒருவர், தனது நிலத்தை சிலர் மோசடியாக அபகரித்ததாக புகார் அளிக்க தலைமைச் செயலகம் சென்றார். அங்கு முதலமைச்சர் விஜயை நேரில் சந்திக்க வேண்டும் எனக் கோரி நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். "நான் செத்தாலும் பரவாயில்லை, விஜயை பார்த்தே ஆக வேண்டும்" எனக் கதறிய அவர், அங்கிருந்த போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நன்றி: குமுதம்