ஜனநாயகத்தின் வில்லன் முதல்வர் விஜய்: மு.க.ஸ்டாலின் பேச்சு

உங்களிடம் வாக்கு கேட்க வரவில்லை, மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்கவே வந்துள்ளேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தாராபுரத்தில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், அடுத்த கட்சி MLA-க்களை விலைக்கு வாங்குவதுதான் நியாயமா, இதுதான் ஜனநாயகமா? என வினவினார். மேலும், "ஜனநாயகத்தின் வில்லன் CM விஜய்" என்றும், மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில் திணிக்கப்பட்டுள்ள இந்த இடைத்தேர்தலில் துரோகிகளுக்கு பொதுமக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி

✕
✕