'வேள்பாரி' திரை வடிவத்துக்காக அனைவரையும் போல நானும் காத்திருக்கிறேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 'வேள்பாரி' நூல் ஒரு லட்சம் பிரதிகளை கடந்து விற்பனையாவதையொட்டி நடைபெற்ற பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார். ஜெயகாந்தன் எழுதிய ‘யாருக்காக அழுதான்' புத்தகத்தை படித்து 3 நிமிடங்கள் அழுததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.