டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து போராடிய SFI, DYFI அமைப்பினரை தமிழ்நாட்டில் வலுக்கட்டாயமாக கைது செய்ததை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டித்துள்ளார். "NEET விவகாரத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடம் இதன் மூலம் வெளிப்படுகிறது. பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தை தனக்கெதிரானதாகக் கருதி அடக்கும் போக்கை நிறுத்த வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.