உன் படத்தை முடித்துக்கொடுக்காமல் சாகமாட்டேன்

மறைந்த மூத்த நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் மணிகண்டன் "2011-இல் அவருக்கு என் ஷார்ட் ஃபிலிம் கதையைச் சொன்னேன். அப்போது நான் சின்னப் பையன், என்னை நம்பிப் பாதி சம்பளத்தில் நடித்துக் கொடுத்தார். ஒரு நாள் அவர் இறந்துவிட்டதாக ஒரு வதந்தி பரவியது. அப்போது அவருக்குக் கால் பண்ணும்போது அவர், 'சாப்பிட்டு இருக்கேன், கவலைப்படாதே. உன் படத்தை முடித்துக் கொடுக்காமல் சாகமாட்டேன்'" என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி