கடலூர் விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் திடீர் பயணம் மேற்கொண்டார். அப்போது கர்நத்தம் அருகே கரும்பு வெட்டும் தொழிலாளர்களிடம் அவர் கலந்துரையாடினார். 'என்னை யாரென்று தெரிகிறதா?' என்று அவர் கேட்டபோது, பெண்கள் தெரியவில்லை என்று பதிலளித்தனர். அதற்கு பிரேமலதா, 'நான் சினிமாவில் நடித்திருந்தால் என்னை யாரென்று தெரிந்திருக்கும். நான் தான் உங்கள் எம்எல்ஏ' என்று கூறியதும் அங்கு கூடியிருந்தவர்கள் சிரிப்பலையில் ஆழ்ந்தனர்.
நன்றி: புதிய தலைமுறை