தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (பிப்.19) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்ட பதிவில், “சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.