புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தமிழ்நாட்டின் புதிய பாஜக தலைவர் பதவிக்காக நான் யாரையும் கை காட்டவில்லை. பாரதிய ஜனதா கட்சியில் தலைவர் பதவிக்கு யாரும் போட்டிப்போடுவதில்லை. எல்லோரும் இணைந்து தலைவரை தேர்ந்தெடுப்போம். ஒரு தொண்டனாக கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே செய்வதே என் தலையாய பணி” என தெரிவித்தார்.
நன்றி: சன்நியூஸ்