ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் சுற்றுக்குள் பெங்களூரு, குஜராத், ஹைதராபாத் அணிகள் நுழைந்துள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு 4 அணிகள் போட்டியிடுகின்றன. இன்று நடைபெறும் 67வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஹைதராபாத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பெங்களூருவும், 3வது இடத்தில் உள்ள ஹைதராபாத்தும் முன்னேற முயற்சிப்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.