பெங்களூருவில் 26 வயது இளம்பெண், கணவர் மற்றும் மாமியார் வீட்டாரின் கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கூடுதல் பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியதால் இந்த முடிவை எடுத்துள்ளார். இறப்பிற்கு முன் எழுதிய கடிதத்தில் தன்னை அசிங்கமான தொழிலுக்கு தள்ள முயன்றதாக குறிப்பிட்டுள்ளார். புகாரின் பேரில் கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.