உ.பி: செயின் கபீர் நகர் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் சந்தோஷ் (39) குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மனைவி லெட்சுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில், லட்சுமி விவாகரத்து கோரி கீழமை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து, நேற்று (ஜூலை 30) நடந்த வழக்கு விசாரணையின் போது, சந்தோஷ் தான் மறைத்து கொண்டுவந்த கத்தியால் மகள் கண்முன்னே லெட்சுமியை சரமாரியாக குத்தி கொன்றுள்ளார். அதன்பின் தப்பியோடிய சந்தோஷ் கைது செய்யப்பட்டார்.