தெலங்கானா: பிரசாந்த் - பிரவாலிகா தம்பதிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி 2 வயதில் குழந்தை உள்ளது. பிரவாலிகா மீண்டும் கர்ப்பமானார். தம்பதி புதிதாக வீடு கட்டி வரும் சூழலில் மனைவி கர்ப்பமாக இருப்பது புதிய வீட்டுக்கு துரதிஷ்டத்தை கொடுக்கும் என கருதிய பிரசாந்த் தனது 6 மாத கர்ப்பிணி மனைவிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்தார். இதனால் ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரவாலிகா உயிரிழந்தார். போலீஸ் விசாரிக்கிறது.