ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் நந்தவரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கண்ணா, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தனது மனைவி வெங்கட லட்சுமம்மாவை கோடாரியால் வெட்டிக் கொன்றுவிட்டு வீட்டைப் பூட்டி தப்பியோடினார். 3 நாட்களுக்குப் பின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீசார் வீட்டைத் திறந்து சடலத்தை மீட்டனர். தலைமறைவான கணவனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.