மும்பையில் நிஷாந்த் திருப்பதி (41) என்பவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்திற்கு மனைவி மற்றும் உறவினர் தான் காரணம் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நிஷாந்தின் தாயார் நீலம் கூறுகையில், "நான் உயிருள்ள பிணம் போல உணர்கிறேன், மகன் இல்லாததால் எனது வாழ்க்கை முடிந்துவிட்டது" என வேதனை தெரிவித்தார். இதனிடையில் நிஷாந்த் மனைவி, உறவினர் மீது போலீஸ் வழக்கு பதிந்து விசாரிக்கிறது.