தெரு நாய்களை வீட்டில் வைத்து வளர்க்கும் மனைவியால், தனக்கு ஏற்படும் மன அழுத்தம் காரணமாக தாம்பத்திய உறவில் சரியாக ஈடுபட முடியவில்லை என 41 வயது நபர் விவாகரத்து கேட்டுள்ளார். குஜராத் உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து மனுதாக்கல் செய்துள்ள அவர், நாய்களுக்கு சமைத்து, பராமரிக்க தன்னை பயன்படுத்தி கொடுமை செய்வதாக கூறியுள்ளார். உரிய ஆதாரங்கள் இல்லாததால் கீழமை நீதிமன்றம் இவரது மனுவை தள்ளுபடி செய்திருந்த நிலையில், தற்போது மேல்முறையீடு செய்துள்ளார்.