தர்மபுரி பிடமனேரி பகுதியைச் சேர்ந்த செல்போன் மெக்கானிக் கோகுல் (31), தனது மனைவி அஞ்சுமாஸ்டெலஸை (28) குடும்ப தகராறு காரணமாக அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு விரட்டியதோடு, தீயிட்டு கொளுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்த அஞ்சுமாஸ்டெலஸின் மாமியார் விஜயா (55) மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோகுலை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவான விஜயாவை தேடி வருகின்றனர்.