ஒரே பைக்கில் ஜோடியாக நகை திருடிய கணவன்-மனைவி

சென்னை பழவந்தாங்கல் பூங்காவில் கடந்த 7-ம் தேதி இரவு நடைப்பயிற்சி செய்து விட்டு வெளியே வந்த பவானி என்ற பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செயினை பறித்து விட்டு தப்பியுள்ளனர். இதுகுறித்து பவானி புகார் அளித்த நிலையில், திருடர்களை போலீசார் தேடி வந்துள்ளனர். CCTV காட்சிகளை ஆராய்ந்ததில் மர்ம நபர்களை போலீசார் அடையாளம் கண்டனர். அதில் அந்தோணி (22) மற்றும் மரியா (24) என்ற திருட்டு தம்பதி சிக்கியுள்ளனர். விசாரணையில், கடன் பிரச்னையால் வட்டி கட்ட முடியாமல் திருடியதாக தெரிவித்துள்ளனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி