2வது மனைவியுடன் கணவர் உடல் கருகி பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில், வீட்டில் இருந்த தம்பதி தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். கீற்று வீட்டில் உறங்கியபோது, அடையாளம் தெரியாத நபர்கள், அவர்களது வீட்டின் வெளியே பூட்டி தீ வைத்தனர். இதில் இருவரும் உடல் கருகி உயிரிழந்தனர். முதல் மனைவி பிரிந்து சென்று விட்டதால் இரண்டாவது மனைவியுடன் கணவர் வசித்து வந்த நிலையில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி