ஆள் கடத்தல் வழக்கு.. பூவை ஜெகன்மூர்த்தி ஆஜராக உத்தரவு

காதல் திருமண விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக சிறுவனை கடத்தியதாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி மீது புகார் எழுந்தது. அவர் தலைமறைவான நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி இன்று (ஜூன் 16) பிற்பகல் 2:30 மணியளவில் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆள்கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் ஏடிஜிபி ஜெயராமனும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி