செஞ்சி காப்புக்காட்டில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காணாமல் போன சிறுமியை தேடும் பணியின் போது, அங்குள்ள காப்புக்காட்டில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடு சுமார் 50 வயதுடைய ஆணுடையதாக இருக்கலாம் என்றும், அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்றும் முதற்கட்டமாகக் கருதப்படுகிறது. இது குறித்து விஏஓ ரஞ்சிதம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தடய அறிவியல் ஆய்வுக்காக எலும்புக்கூடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕